‘‘இந்தியை திணிக்கமாட்டோம் என்பது நேருவின் வாக்குறுதி’’ – வைரமுத்து

‘‘இந்தியை திணிக்கமாட்டோம் என்பது நேருவின் வாக்குறுதி’’ – வைரமுத்து

சென்னை:

நாடுமுழுவதும் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில், கன்னடா, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு ஆண்டுகள் பயிலவேண்டும் என மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை, தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த கல்விக்கொள்கையின் பரிந்துரைகளான மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பக்கத்தில், ‘‘இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தியைத் திணிக்க மாட்டோம் என்பது நேருவின் வாக்குறுதி. மத்திய அரசுக்கு நேருவைப் பிடிக்குமோ பிடிக்காதோ தெரியாது. நேரு கொடுத்த வாக்குறுதி பிடிக்காமலிருக்கக்கூடாது’’ என அவர் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்