எங்கள் தயவில் எம்.பியான வைகோ.. இளங்கோவன் கண்டனம்

எங்கள் தயவில் எம்.பியான வைகோ.. இளங்கோவன் கண்டனம்

சென்னை:
காங்கிரஸ் தயவில் எம்.பியாக தேர்வான வைகோ எங்களை விமர்சனம் செய்யலாமா என்று முன்னாள் அக்கட்சியின் தலைவர் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார்.

காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்த விவாதத்தில் மதிமுக எம்பி வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து இருந்தார்.

இதற்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இது பற்றி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது:

மதிமுக எம்.பி., வைகோ பாஜகவை விமர்சனம் செய்யமால், காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து வருகிறார். காங்கிரஸ் தயவில்தான் வைகோ எம்பி ஆனார்.

வைகோ கொஞ்சம் நன்றியோடு இருக்க வேண்டும். நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் அவரால் எம்பி ஆகி இருக்க முடியாது.

ஆனால் அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு வைகோ துரோகம் செய்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சை கேட்டு வைகோ பேசியுள்ளார்.

அமித்ஷா காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ய சொல்லியுள்ளார். அதே போன்று வைகோ விமர்சனம் செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்