உ.பி.,யில் அமைச்சரவை மாற்றியமைப்பு

உ.பி.,யில் அமைச்சரவை மாற்றியமைப்பு

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைத்து விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் 23 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இவர்களில் 6 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

முதல்வர் யோகி அதித்யநாத் முதல்வராக பதவியேற்றதிலிருந்து தற்போது முதன்முதலாக தனது அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார்.

ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் எம்பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், 6 அமைச்சர்கள் சரிவர செயல்படததாலும் இந்த அமைச்சரவை விரிவாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்