9ம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர்

9ம் தேதி வரை பேரவை கூட்டத்தொடர்

சென்னை:

வரும் 9ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பேரவையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை வரும் 9-ம் தேதிவரை நடத்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசுக் கொறடா, தி.மு.க சார்பில் துரைமுருகன் மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதன் முடிவிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாகக் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற செயலரிடம் மனு அளித்துள்ளார், அது தொடர்பான விவாதமும் உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக விவாதமும் வரும் நாள்களில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்