உன்னாவ் பாலியல் வழக்கில் 3 போலீசார் சஸ்பெண்ட்

உன்னாவ் பாலியல் வழக்கில் 3 போலீசார் சஸ்பெண்ட்

புதுடெல்லி:

உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை லாரியை ஏற்றி கொல்ல சதி செய்ததாக பா.ஜ. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் சிங் பாஜகவில் இருந்து அக்கட்சி நீக்கியுள்ளது.

உன்னாவ் பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் 30 நாட்கள் விசாரிக்க கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியுமா? என அரசுக்கு நீதிபதி தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்