தொழிற்சங்க விழிப்புணர்வு கூட்டம்

தொழிற்சங்க விழிப்புணர்வு கூட்டம்

ஒசூர்:

தொழிலாளர் மேம்பாடு மற்றும் புத்தாட் நிறுவனத்தின் சார்பில், சிறுகுறு தொழிற்சங்க உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தமிழகத்தின் தன்னாட்சி அதிகாரமுடைய தொழிலாளர் மேம்பாடு மற்றும் புத்தாட் நிறுவனத்தின் சார்பில் சிறு குறு தொழிற்சாலைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்தில் பேசிய தொழிலாளர் மேம்பாட்டு மற்றும் புத்தாட் நிறுவனத்தின் துணை இயக்குனர் அழகிரி சாமி பேசுகையில், தனித்தனியாக சிறிய நிறுவனங்கள் பிரிந்து இருப்பதை விட ஒன்றினைந்து மத்திய,மாநில அரசுகளின் பொதுபயன்பாட்டு நிதியை பயண்படுத்திக்கொள்ள வேண்டும்,

அரசு 90% மாணியத்துடன் 15 கோடி ரூபாய் வரையில் வழங்கப்படுவதால், தங்களுடைய தொழில் விரிவுப்படுத்தி, தரம் மற்றும் உற்ப்பத்தியை பெருக்கி கொள்ள முடியும் என விளக்கவுரை ஆற்றினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிறகாக பேசிய சிறுகுறு தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சேகர் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்கள் கட்டணத்தை 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக குறைந்திருப்பது வரவேற்க தகுந்ததாக இருந்தாலும் முழுமையாக தொழிலாளர் கட்டணத்தை நீக்கிட முன்வர வேண்டும், மேலும் ஜிஎஸ்டி வரியையும் குறைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

அரசு சார்பில் ஏற்ப்படுத்தப்பட்டிருந்த தொழிற்சங்கங்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற சிறுகுறு தொழிற்சாலை உரிமையாளர்கள், மிகவும் பயனுள்ளதாகவும் அரசின் உதவிகளை பற்றி அறிந்துக்கொள்ள முடிந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்