ஐ.நா., இன்று ஆலோசனை

ஐ.நா., இன்று ஆலோசனை

நியூயார்க்:

ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்துகிறது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, மேலும், காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக பிரிக்கப்பட்டது குறித்தும் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதுசம்பந்தமாக பாகிஸ்தான் மற்றும் சீனாவும் ஐ.நா., பாதுகாப்பு கவுனசிலில் முறையிட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் குறித்து தனியாக விசாரிக்க வேண்டும் என சீனா கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில், ஐ.நா.,வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று ரகசியமாக நடைபெறுகிறது. இதில், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள நிலையில், ரஷ்யா மட்டும் இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிகிறது. மற்ற நாடுகள் இந்தியாவுக்க எதிராக பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டம் ரகசியமாக நடைபெறும் எனவும், இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுபவை எக்காரணத்தை கொண்டும் வெளியில் வராது என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்