வாழ்நாளில் சதமே அடிக்காமல் அதிக ரன்களை குவித்த வீரர்கள்

  • In Sports
  • May 29, 2020
  • 177 Views
வாழ்நாளில் சதமே அடிக்காமல் அதிக ரன்களை குவித்த வீரர்கள்

ஒரு நாள் கிரிக்கெட்டில் தன் வாழ்நாளில் சதம் அடிக்காமல் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் மிஸ்பா-உல்-ஹக்.

பாகிஸ்தான் அணி வீரர் மிஸ்பா-உல்-ஹாக் இதுவரை 162 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5,122 ரன்களை அடித்துள்ளார். இதில் மொத்தமாக 42 அரை சதங்களை அடித்துள்ளார், ஆனால் ஒரு போட்டியில் கூட அவர் சதம் அடிக்கவில்லை.

ஒரு நாள் போட்டியில் அதிகபட்சமாக 96 ரன்களை 2013 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அடித்தார் மிஸ்பா-உல்-ஹாக். இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்
சதம் அடிக்காமல் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் (ஒரு நாள் போட்டி)

1) மிஸ்பா-உல்-ஹாக் – 5,122 ரன்கள்
2) வாசிம் அக்ரம் – 3,717 ரன்கள்
3) மொயின் கான் – 3,266 ரன்கள்
4) ஹீத் ஸ்டிரீக் – 2,943 ரன்கள்
5) ஆண்ட்ரூ ஜோன்ஸ் – 2,784 ரன்கள்

அதே நேரம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக10 சதங்களை அடித்துள்ளார் மிஸ்பா, அதுவும் டெஸ்ட் போட்டிகளில்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்