உதயநிதி பரிசு வழங்கி பாராட்டு

உதயநிதி பரிசு வழங்கி பாராட்டு

ஒசூர்:

ஒசூரில், திமுக இளைஞரணி சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

ஒசூரில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

ஒசூரில் திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான பேச்சுப்போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், கவிதை ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றன, இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த 234 பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேச்சுப்போட்டியில் முதலிடத்தை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் பாண்டியன் என்ற மாணவரும், கட்டுரைப் போட்டியில் முதலிடத்தை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவியும், கவிதை ஒப்புவித்தல் போட்டியில் முதலிடத்தை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தாரணி என்ற மாணவியும், பிடித்து வெற்றி பெற்றனர். அதேபோல இந்த போட்டியில் 2ஆம் இடம் 3ஆம் இடம் என அடுத்தடுத்து மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். முதல் பரிசு பெற்ற மாணவ மாணவியர்களுக்கு 25 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சான்றிதழும், இரண்டாம் இடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு 15 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சான்றிதழ்களும், மூன்றாம் இடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு 10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

அதேபோல இந்த நிகழ்ச்சியில் ஆறுதல் பரிசாக போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 2500 வழங்கப்பட்டது, மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இதில் 234 மாணவ மாணவிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

மாநில அளவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை நடத்த மொத்தம் 3 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரம் பணம் செலவாகி உள்ளது என்பதும் கூறப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்