‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

  • In Cinema
  • December 31, 2019
  • 197 Views
‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

சென்னை:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘தர்பார்’ படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ப்ரதீக் பார்பர், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொங்கலன்று வெளியாகும் என முதலில் அறிவித்த நிலையில், தற்போது ஜனவரி 9ம் தேதி முன்கூட்டியே ரிலீசாகிறது. அதற்கு முன் 8ம் தேதியே அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோ திரையிடப்படுகிறது.

இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், ‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் இருப்பதால் யு/ஏ வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்