பேருந்து நிலையத்தில் இடையூறாக டூவீலர்கள்

பேருந்து நிலையத்தில் இடையூறாக டூவீலர்கள்

ஒசூர்:

ஓசூர் பேருந்து நிலைய வளாகத்தினுள் பயணிகளுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள அப்பாவு பிள்ளை பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும், இதனை மாநகராட்சி அதிகாரிகள் பார்த்தும் கண்டுக்கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.

ஓசூர் மாநகராட்சி, என்பது தமிழக மாநில எல்லையில் அமைந்திருப்பதால் வியாபாரம் வணிகம், தொழில் ரீதியாகவும், தினந்தோறும் பெங்களூருவிற்கு வேலைக்கு செல்வோர் பள்ளி,கல்லூரி மாணவர்கள் என ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.

எந்நேரமும் பயணிகள் நிறைந்ததாக இருக்கும் ஓசூர் அப்பாவு பிள்ளை பேருந்து நிலைய வளாகத்திற்குள் ஏராளமான இருசக்கர வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு வருகின்றனர்.

மழைக்காலங்களில் அனைத்து பயணிகளும், மழையில் நனையாமல் நிற்க்ககூட முடியாத சூழல் நிலவி வருகிறது.

அருகில் தனியாரின் இரண்டு கட்டண இருசக்கர வாகன நிறுத்தகங்கள் இருந்தாலும், கட்டணத்தை மிச்சப்படுத்துவதற்காகவே பயணிகளின் நலனில் அக்கறையில்லாமல் செல்வதாக புகார் எழுந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளுக்கு இவை தெரிந்தபோதும், கண்டும் காணாமல் இருப்பதாக குற்றம் சாட்டும் பேருந்து பயணிகள், இதுப்போன்று பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்