தொடர் கொள்ளையர்கள் சிக்கினர்

தொடர் கொள்ளையர்கள் சிக்கினர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செல்வனகரதினம்.இகாப அவர்களின் உத்தரவுப்படி நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது இது போன்ற தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் முத்துக்குமார்(21) மற்றும் பாலு மகன் பார்த்திபன்(23) என்பது விசாரணையின் முடிவில் தெரிய வந்தது இந்த இரு குற்றவாளிகளும் தொடந்து வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்த இடங்கள் ஆகியவற்றில் நோட்டமிட்டு அங்கு நிறுத்தப்பட கூடிய இருசக்கர வாகனங்களை திருடி சென்று அதன் உதிரி பாகங்களை விற்பது இதனையே வாடிக்கையாக செய்து வந்துள்ளனர் எனவே அந்த வகையில் இவர்கள் இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்றது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானதை தொடர்ந்து அந்த சிசிடிவி கேமராவில் இருக்கக்கூடிய நபர்கள் யார் என்பது குறித்து நாகப்பட்டினம் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தொடர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரு குற்றவாளிகள் என்பது விசாரணையின் முடிவில் தெரிய வந்தது இதனை அடுத்து இரு குற்றவாளிகளையும் நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் உத்தரவு படி அந்த இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்குப் அடைக்கப்பட்டனர் மேலும் அவர்களிடம் சுமார் 3லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 6 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்