இணையதள குற்றங்கள் தடுப்பு..! கால அவகாசம் கேட்டு டுவிட்டர் மனு..!!

இணையதள குற்றங்கள் தடுப்பு..! கால அவகாசம் கேட்டு டுவிட்டர் மனு..!!

சென்னை:

இணையதள குற்றங்களை தடுப்பது குறித்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்த கால அவகாசம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனம் மனுதாக்கல் செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கோரி, ஆண்டனி கிளமெண்ட் ரூபன் என்பவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், , இணையதள குற்றங்களை தடுப்பது குறித்து டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆலோசனை நடத்துவதற்கான தேதியை ஜூன் முதல் வாரம் வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கக்கோரி, டுவிட்டர் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்