‘‘உலகிலேயே தூய்மையான நாடு அமெரிக்காதான்.. இந்தியா இல்லை’’ டிரம்ப் விமர்சனம்..!

‘‘உலகிலேயே தூய்மையான நாடு அமெரிக்காதான்.. இந்தியா இல்லை’’ டிரம்ப் விமர்சனம்..!

வாசிங்டன்:

‘தூய்மை இந்தியா’ திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்திய நிலையில், தூய்மை பற்றி அக்கரை இல்லை என டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

தூய்மை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ‘‘அமெரிக்கா தான் உலகிலேயே தூய்மையான நாடு. தாங்கள் இன்னும் மேம்பட்டு வருகிறோம்.

ஆனால், இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் தூய்மையான காற்றும், நீரும் கிடைப்பதில்லை. தூய்மை பற்றி அந்த நாடுகளுக்கு பொறுப்புணர்வுவும் அக்கரையும் இல்லை என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

கார்பன்-டை-ஆக்சைடை அதிகளவு வெளியேற்றும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்தாலும், அந்த நாட்டை விட இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் காற்று மாசுபாடு அதிகளவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்