டிரம்ப்புடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி.. தூதரை கொன்ற வடகொரிய அதிபர்.!

டிரம்ப்புடன் நடந்த பேச்சு வார்த்தை தோல்வி.. தூதரை கொன்ற வடகொரிய அதிபர்.!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையே இரண்டாவது சந்திப்பு கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது சுமூக உடன்பாடு ஏற்படவில்லை, மேலும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தை தோல்வியால் அதிருப்தி அடைந்த வடகொரியா அதிபர் மறுபடியும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், டொனால்டு டிரம்ப் உடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த, அமெரிக்காவுக்கான வடகொரியாவின் சிறப்பு தூதரான கிம் ஹயோக் சோல் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தென்கொரிய தொலைக்காட்சி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வடகொரியாவின் துப்பாக்கிச்சுடுதல் குழுவினரால், உச்ச தலைவருக்கு துரோகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் கிழ், கிம் ஹயோக் சோலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்