உச்சிமாநாட்டுக்கு திடீரென வந்த டிரம்ப்

  • In General
  • September 24, 2019
  • 193 Views
உச்சிமாநாட்டுக்கு திடீரென வந்த டிரம்ப்

நியூயார்க்:

ஐநா.,வில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டில் திடீரென வந்த அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோரின் பேச்சை உன்னிப்பாக கவனித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா.,வில் பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது வெறொரு நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்பதாக திட்டமிருந்த நிலையில், பருவநிலை ஆர்வலர்களும் எதிர்கட்சியை சேர்ந்தவர்களும் டிரம்பை விமர்சித்திருந்தனர்.

ஆனால் இதை மறுத்த டிரம்ப், ஹூஸ்டன் வெள்ளப்பெருக்கு விவகாரத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், பருவநிலை மாற்றத்தில் தாம் அக்கறையாக இருப்பதற்கு அதுவே சான்று என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐ.நா.வில் நேற்று பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்றபோது அங்கு திடீரென வந்த டிரம்ப், 15 நிமிடங்கள் மட்டும் இருந்தார். மாநாட்டில் அவர் எதுவும் பேசவில்லை என்றபோதிலும், பிரதமர் மோடி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் பேச்சுகளை உன்னிப்பாகக் கவனித்தவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்