முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது வங்காள தேசம்!

  • In Sports
  • May 18, 2019
  • 196 Views
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது வங்காள தேசம்!

அயர்லாந்து:

அயர்லாந்து நாட்டில் நடைபெற்றுவந்த முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வங்காள தேசம் கோப்பையை கைப்பற்றியது.

அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்து நாட்டில் நடைபெற்றது.

இதன் இறுதிப்போட்டியில், வெஸ்ட் இண்டீசும் வங்க தேச அணியும் மோதின. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 131 ரன்கள் குவித்தது. மழையின் காரணமாக அந்த ஆட்டத்தின் ஓவர் 24 ஆக குறைக்கப்பட்டது.

பின்னர் 23 பந்துகளை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் 21 ரன்களே அடித்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் 24 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய வங்காள தேச அணிக்கு 24 ஓவரில் 210 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சவுமியா சர்கார் 41 பந்தில் 66 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 22 பந்தில் 36 ரன்களும் சேர்த்தனர். மொசாடெக் ஹொசைன் 24 பந்தில் 52 ரன்கள் விளாச 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்து வங்க தேச அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்