முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

புதுடெல்லி:

நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், முத்தலாக் மசோதா மீதான மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 303 வாக்குகளும், எதிராக 82 வாக்குகளும் பெற்றதால் இந்த மசோதா நிறைவேறியுள்ளது.

முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ள நிலையில், மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்