முத்தலாக் மசோதா: அதிமுக வெளிநடப்பு

முத்தலாக் மசோதா: அதிமுக வெளிநடப்பு

புதுடெல்லி:

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

முத்தலாக் மசோதவை, நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக அதிமுக எம்பி., எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. இது இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டத்திற்கு எதிராக உள்ளது எனவும் மசோதாவில் சில மாற்றங்களை கூறி, தேர்வுக்குழுவுக்கு அனுப்ப கூறினோம். ஆனால் அரசு ஏற்காததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு துவங்கிய நிலையில், ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்