ரயில் கட்டணம் உயர்வு

ரயில் கட்டணம் உயர்வு

புதுடெல்லி:

நாடுமுழுவதும் ரயில் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, 2ம் வகுப்பு பெட்டிகளில் கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதமும், எக்ஸ்பிரஸ், மெயில்களில் கிலோமீட்டருக்கு 2 காசுக்ள் வீதமும், ஏசி பெட்டிகளுகளில் கிலோமீட்டருக்கு 4 காசுகள் வீதமும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சாதாரண பெட்டிகளுக்கான பயணக் கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களில் கட்டண உயர்வு இல்லை. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது.

ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது. அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்