ரயில் நிலைய கேன்டீனில் பார்சல் உணவுக்கு அனுமதி!

ரயில் நிலைய கேன்டீனில் பார்சல் உணவுக்கு அனுமதி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் ரயில்சேவை இயக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில்கள் குறிப்பிட்ட அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரயில் நிலைய கேன்டீன்களில், ‘பார்சல்’ உணவு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் என பண்டிகைகள் வர இருக்கும் நிலையில் பயணிகளின் தேவைகளுக்காவும், அவர்களின் உணவு தேவைகளை சமாளிக்கவும், ரயில்வே கேன்டீன், ‘புட் பிளாசா, ஜன் அஹர்ஸ், செல் கிச்சன்ஸ்’ பயணியர் ஓய்வறை ஆகிய வற்றில் சமைக்கப்பட்ட உணவுகளை ‘பார்சல்’ செய்து விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்