இனி ஓடும் ரயிலில் மசாஜ்..! ரூ.100 தான் கட்டணம்..!!

இனி ஓடும் ரயிலில் மசாஜ்..! ரூ.100 தான் கட்டணம்..!!

புதுடெல்லி:

நாட்டிலேயே போக்குவரத்து துறையில் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கி வருவது இந்திய ரயில்வே துறைதான். இது மத்திய அரசின் வருவாயில் முக்கிய பங்குவகிக்கிறது.

ரயில் பயணிகளின் வசதிக்காக புதிய சேவைகளை அளிப்பதில் ரயில்வே துறை பல யுக்திகளை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நாட்டிலேயே முதல் முறையாக ஓடும் ரயிலிலேயே மசாஜ் செய்யும் வசதியை ஏற்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. மேற்கு ரயில்வே மண்டலத்தின் ரத்லாம் பிரிவு இதற்கான பரிந்துரையை முன் வைத்துள்ளது. 39 ரயில்களில் மசாஜ் சேவையை தொடங்கலாம் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒப்பந்த முறையில் முதலில் இதனை செயல்படுத்தலாம் என்றும், மசாஜ் சேவை மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ரயில்வே உயர் அதிகாரி ராஜேஷ் பஜ்பாய் தெரிவித்துள்ளார். மசாஜ் சேவைக்கு ரூ.100 முதல் கட்டணமாக வசூலிக்கலாம் என்றும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறை பயணிகளுக்காக பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்