சீன பிரதமர் -மோடி சந்திப்பு; டிராபிக் ராமசாமி எதிர்ப்பு

சீன பிரதமர் -மோடி சந்திப்பு; டிராபிக் ராமசாமி எதிர்ப்பு

ஒசூர்:

ஊழல் சீன பிரதமருக்கு வரவேற்பு அளிப்பது இந்திய பிரதமர் மோடிக்கு அழகு அல்ல, இதுக்குறித்து வழக்கு தொடர இருப்பதாக டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மக்கள் பாதுகாப்பு கழகத்தின் சார்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டிராபிக் ராமசாமி கலந்துகொண்டு இருசக்கர வாகனங்களில் தலைகவசம் இல்லாமல் வந்த 20 பேருக்கு ஹெல்மெட் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய டிராபிக் ராமசாமி, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும் மாமல்லபுரம் சீனா பிரதமர் வருகைக்காக பேனர் அமைக்கப்பட்டுள்ளதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அரசு இடத்தில் வைத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதிக்கோர வேண்டிய அவசியமில்லை விதிமுறைகளின்படி பேனர் அமைக்க வேண்டுமென்பதே நீதிமன்றத்தின் உத்தரவு; அதையும் மீறி சட்டத்திற்கு விரோதமாக அரசு பேனர் வைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆட்சியை கலைக்கும் சூழலைக்கூட ஏற்ப்படுத்த முடியும் என்றார்.

பிரபல இயக்குனர் உட்பட 49 பேரின் மீதான தேச துரோக வழக்கு பற்றிய கேள்விக்கு, பிரதமர் என்பவர் சட்டத்திற்க்கு உட்படாதவர் ஒன்றுமில்லை, 130 கோடி மக்களை மிரட்டும் வகையில் மறைமுகமாக மோடி தலையிட்டுள்ளார். நேரடியாக தலையிட அவருக்கு தைரியமில்லை. சீன பிரதமர் 13 டன் தங்கத்தை ஊழல் செய்தவர். அவரை வரவேற்கும் மோடிக்கு இது அழகல்ல; அரசிற்கும் அழகல்லை. இதை நிறுத்தாவிட்டால் வழக்கு தொடருவோம் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்