தக்காளி விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

தக்காளி விலை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஒசூர்:

ஓசூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து தக்காளி ஏற்றுமதி அதிகரிப்பால் உரிய விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதி நல்ல மண் வளமும் சீரான சீதோசன நிலை நிலவுவதால் திறந்தவெளி மற்றும் பசுமைக்குடில்கள் மூலமாக காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக ஓசூர் பகுதி தக்காளிக்கள் கர்நாடகா, கேரளா,ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தற்போது அதிகஅளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் உரிய விலை கிடைப்பதாக தக்காளி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தற்போது 25 கிலோ எடைக்கொண்ட நாட்டுத்தக்காளி 500 ரூபாய்க்கும், பெங்களூரு தக்காளி 450 ரூபாய்க்கும் விவசாயிகளிடம் பெறப்பட்டு வருகிறது.

ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் மேலும் தக்காளி விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்