தக்காளி விலை குறைவு; விவசாயிகள் கவலை

தக்காளி விலை குறைவு; விவசாயிகள் கவலை

ஒசூர்:

ஒசூர் பகுதிகளில் தக்காளி கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக விற்க்கப்படுவதால் தக்காளி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதி தற்போது குளிர்ந்த சீதோஷன நிலை நிலவுவத £ல் காய்கறி, கீரை உள்ளிட்டவைகளின் விளைச்சல் நல்லமுறையில் உள்ளது.

கடந்த மாதம் வரை தக்காளி கிலோ 20 ரூபாய்க்கும் அதிகமாக விற்று வந்த நிலையில் கடந்த 10 நாட்களாகவே தக்காளி ஒருகிலோ ஒசூர் காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்டவைகளில் 8,9 ரூபாய்க்கு மட்டுமே வாங்கப்படுவதால்,த க்காளி விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.

கர்நாடக,ஆந்திரா, மகாராஸ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகப்படியான தக்காளி உற்ப்பதி செய்யப்பட்டிருப்பதும் அவைகள் ஒசூர் சந்தைக்கு வர குவிந்ததே விலை வீழ்ச்சிக்கான காரணமாக சொல்லப்படுகிறது.

ஒசூர் சந்தைகளில் நாட்டுத்தக்காளி கிலோ 6 ரூபாய்க்கும், பெங்களூரு தக்காளி கிலோ 9 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது.

தக்காளி அறுவடை செய்யும் கூலி தொழிலாளிகளுக்கும் மார்க்கெட் பகுதிக்கு கெ £ண்டு வர வாடகை உள்ளிட்டவைகளுக்கும் கூட வருவாய் இல்லாமல் தவித்து வருவதால் தோட்டங்களிலேயே வீணாகும் சூழல் ஏற்ப்பட்டுள்ளதால் ஒசூரில் தக்காளி கூழ் தொழிற்சாலையை ஏற்ப்படுத்தி தர வேண்டுமென அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்