செப்.1ம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்த முடிவு சரக்கு வாகனங்களின் வாடகை உயரும் அபாயம்

செப்.1ம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்த முடிவு சரக்கு வாகனங்களின் வாடகை உயரும் அபாயம்

கட்டணத்தை திரும்ப பெற லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

சேலம்: செப்டம்பர் 1ம் தேதி முதல் உயரவுள்ள சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ேதசிய, மாநில நெடுஞ்சாலைகள் இரு வழிச்சாலைகளாக இருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்த தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் அந்தந்த மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டன. தற்போது நாட்டில் உள்ள 60 சதவீத சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளன. அந்த வகையில் சேலத்தில் ேசலம்-பெங்களூரு, சேலம்- மதுரை, சேலம்- கோவை, சேலம்- உளுந்தூர்பேட்டை சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளனஇந்த சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாருக்கு டெண்டர் விட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டாக சுங்கக்கட்டணம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 16ம் தேதி, மத்திய அரசு சுங்கக்கட்டணத்தை உயர்த்தியது. கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் இயங்கவில்லை. பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், இவற்றை பொருட்படுத்தாமல் மத்திய அரசு சுங்கக்கட்டணத்தை உயர்த்தியது. சுங்கக்கட்டணம் உயர்வை திரும்ப பெறவேண்டும் என வாகன உரிமையாளர்கள் அரசை வலியுறுத்தியும் பயனில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 21 டோல்கேட்களில் சுங்கக்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பது லாரி உரிமையாளர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலை ெதரிவித்துள்ளனர்.இது குறித்து சேலத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:

இந்தியா முழுவதும் 565 டோல்கேட்டுகள் உள்ளன. இவற்றின் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் டெண்டர் எடுத்த உரிமையாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அடிக்கடி சுங்கக்கட்டணத்தை உயர்த்தி வருவதால் வாகன ஓட்டிகள், பஸ், லாரி, வேன் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழிற்சாலைகள் இன்னும் முழுமையாக செயல்படாமல் உள்ளன. இதனால் 50 சதவீத லாரிகளுக்கு சரிவர சரக்குகள் கிடைக்காமல் மாதக்கணக்கில் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பஸ்கள் 5 மாதத்திற்கு மேலாக இயங்காமல் உள்ளது. இப்படி இருக்கும்பட்சத்தில், கொரோனா காலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள 48 ேடால்கேட்டுகளில், 26 டோல்கேட்டில் சுங்கக்கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியது.

இந்த நிலையில் மீதமுள்ள 21 டோல்கேட்களில், 5 முதல் 10 சதவீதம் கட்டணத்தை செப்டம்பர் 1ம் தேதி முதல் உயரத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே லாரி தொழில் முடங்கியுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் காலாண்டு வரி, இன்சூரன்ஸ் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், 21 டோல்கேட்டில் சுங்கக்கட்டணம் உயர்த்துவது தேவையற்றது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 7 சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்கிறது. இதனால் சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள ேடால்கேட்டுகளை நீக்கி, அதற்கு பதில் ஒன் டைம் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வரவேண்டும். இவ்வாறு லாரி உரிமையாளர்கள் கூறினர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அடிக்கடி சுங்கக்கட்டணத்தை உயர்த்தி வருவதால் வாகன ஓட்டிகள், பஸ், லாரி, வேன் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்