தமிழகத்தில் இன்றும் மழை!

தமிழகத்தில் இன்றும் மழை!

சென்னை:

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில்லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுப்பெற்றுள்ளதால், இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்