TNPSC வெளியிட்ட அறிவிப்பு: ஏற்ப்பட்ட அதிரடி மாற்றம்

TNPSC வெளியிட்ட அறிவிப்பு: ஏற்ப்பட்ட அதிரடி மாற்றம்

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய நபர்கள் அதிக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்து இருந்தது குறித்த புகாரின் பேரில் தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த முறைகேடு விவாகரத்தில் ஈடுபட்ட 39 பேரின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டதுடன், முறைகேட்டில் சம்மந்தப்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடாக தேர்வு எழுதியவர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து கிடுக்குபிடி விசாரணையை மேற்கொண்டனர்.இதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. விரல் ரேகை ஒப்பிட்டு உண்மை தன்மையை சரிபார்த்த பின்னே தேர்வு எழுத அனுமதி. முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் ஆறு மாற்றங்களை செய்தது.

இந்நிலையில், குறைகள், புகார்களை நேரடியாக தெரிவிக்க செல்போன் செயலியை TNPSC உருவாக்கியுள்ளது. கட்டாய ஆதார் உள்ளிட்ட 12 புதிய சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்