குரூப் 4 முறைகேடு; மேலும் மூவர் கைது

  • In Chennai
  • January 27, 2020
  • 177 Views
குரூப் 4 முறைகேடு; மேலும் மூவர் கைது

சென்னை:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட் டுள்ளநிலையில், மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

டிஎன்பி
எஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடாக தேர்வெழுதிய 9 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 9 பேரிஅரசு ஊழியர்களான பள்ளிக்கல்வித் துறை ஊழியர் ரமேஷ், எரிசக்தி துறை ஊழியர் திரு க்குமரன், டிஎன்பிஎஸ்சி அலுவலக ஊழியர் ஓம் காந்தன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கார்த்தி, ஆவடி அருகில் உள்ள ஏகாம்பர சத்திரத்தை சேர்ந்த வினோத்குமார் மற்றும் கடலூர் மாவட்டம் சிறு கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் ஆகியோர் இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சீனுவாசன் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு மேலும் 4 நபர்களிடம் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் பெற்று முறைகேடாக தேர்வு எழுத உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து புலன்விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்