விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பாராட்டு

  • In Chennai
  • September 7, 2019
  • 211 Views
விஞ்ஞானிகளுக்கு முதல்வர் பாராட்டு

‘சந்திரயான் 2’ விண்கலத்திற்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த திட்டத்தில் மட்டுமல்லாமல், மேலும் பல திட்டங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

விஞ்ஞானிகள் புது நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்டு பல வெற்றிகளை பெற தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.

‘சந்திரயான் 2’ விண்கலத்தை ஏவும் திட்டத்துக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி, உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்