முதல்வர், ஸ்டாலின் காரசார விவாதம்!

முதல்வர், ஸ்டாலின் காரசார விவாதம்!

சென்னை:

பேரவையில் முதல்வர் பழனிச்சாமியும், எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸடாலினும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மின்துறை மானியக் கோரிக்கையின்போது, திமுக சார்பில் செந்தில்பாலாஜி எம்எல்ஏ பேசினார். முதல்வர் குறித்து செந்தில்பாலாஜி தெரிவித்த கருத்தால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

யாரிடமும் குனிந்து கும்பிட்டு ஸ்டாலின் பதவியை பெறவில்லை என செந்தில்பாலாஜி தெரிவித்தார். அதற்கு முதல்வர் எங்களை தொடர்புபடுத்தி பேசுவது தவறு என தெரிவித்தார்.

அதற்கு செந்தில்பாலாஜி குனிந்து பதவி வாங்கிய படங்களை வெளியிடட்டுமா? என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், நீங்கள் தவழ்ந்து பதவி வாங்கிய வீடியோ என்னிடம் உள்ளது காட்டட்டுமா என தெரிவித்தார்.

இதனால் பேரவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்