500 புதிய பேருந்துகள் துவக்கம்..!

500 புதிய பேருந்துகள் துவக்கம்..!

சென்னை:

ரூ.159 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கிவைத்தார்.

ரூ.1500 கோடி செலவில் 5000 புதிய பேருந்துகளை வாங்கி தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.1001 கோடி செலவில் 3381 பேருந்துகள் தொடங்கிவைக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்துக்கு 100 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 150 பேருந்துகள், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் துவக்கிவைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்