தமிழக முதல்வர் டெல்லி பயணம்..!

தமிழக முதல்வர் டெல்லி பயணம்..!

சென்னை:

பிரதமர் மோடி தலைமையிலான நிதிஆயோக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு செல்கிறார்.

5வது நிதி ஆயோக் கூட்டம் குடியரசு தலைவர் மாளிகையில் நாளை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டத்தில் மாநில அரசுகளின் திட்டங்கள், நீர் மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்