திருமலை பஸ் டிக்கெட்டில் ஜெருசலம் விளம்பரம்

திருமலை பஸ் டிக்கெட்டில் ஜெருசலம் விளம்பரம்

திருப்பதி:

ஆந்திராவின் திருமலை செல்லும் ஆந்திர அரசு பேருந்து டிக்கெட்டில் புனித ஹஜ், ஜெருசலம் யாத்திரை குறித்த விளம்பரம் அச்சிடப்பட்டிருந்ததற்கு அம்மாநில பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் திருமலை அரசு பஸ் டிக்கெட்டில் புனித ஹஜ் மற்றும் ஜெருசலம் யாத்திரை விளம்பரம் அச்சிடப்பட்டிருந்தது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விவகாரத்தில், ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட பா.ஜ., தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். பஸ் டிக்கெட்டுகளில் அச்சிடப்படும் வேற்றுமத பிரசார விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விளம்பரம் சிறுபான்மையினர் துறை மூலம் இகொடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்