மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்

மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்

ஒசூர்:

தேன்கனிக்கோட்டையில் பெய்த மழையால் 7 மின்கம்பங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை முதல் செல்லும் அய்யூர் சாலையில், நேற்றிரவு பெய்த மழையால் புதிதாக அமைக்கப்பட்ட 7 மின்கம்பங்கள் சாலை ஓரங்களில் சாலையோரங்களில் உள்ள வயல்வெளிகளிலும் சாலையிலும் சாய்ந்து கிடக்கின்றன.

இதனால் நள்ளிரவு முதல் துண்டிக்கப்பட்ட மின்சாரம் தற்போதுவரை மின்கம்பங்கள் சரிசெய்யாமல் மின்சாரம் கொடுக்கப்படவில்லை.

மேலும் அய்யூர், பெரிய புதுக்கோட்டை, சாபாரணப்பள்ளி மற்றும் ஏனிஅத்திக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையில் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல இயலாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த மின்கம்பங்களை மின்சார துறையினர் சரியான முறையில் பணிகள் மேற்கொள்ளாததால்தான் இந்த கம்பங்கள் 6 மாதத்திற்குள் சாய்ந்து கிடக்கின்றன என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக சம்பந்தப்பட்ட மின்சார துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்