புதிய தார்சாலைகளுக்கு பூமி பூஜை

புதிய தார்சாலைகளுக்கு பூமி பூஜை

ஒசூர்:

தளி பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்க எம்எல்ஏ பிரகாஷ் பூமி பூஜை செய்து துவக்கிவைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே, கொமாரனப்பள்ளி முதல் கொத்தஜுகூர் வரையிலும், தளி- தேன்கனிக்கோட்டை சாலை முதல் ஒன்னுப்பள்ளி வரையிலும், தளி – தேன்கனிக்கோட்டை மெயின் சாலை முதல் கிறிஸ்துப்பாளையம் வரையிலும் புதிதாக அமைக்கப்படவுள்ள தார் சாலைகளுக்கு பூமி பூஜையை தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார்.

உடன் தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாச ரெட்டி, அவைத்தலைவர் கிரிஷ், துணை செயலாளர் மஞ்சுநாத், பவுல்ராஜ், ராஜப்பா, அருட்தந்தையர், கிஷிறி.முனிராஜ், ஊர்கவுண்டர் கஸ்பார், அந்தோணி, ஆசிரியர் தோம்னிக், சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்