விஜய் படத்தில் முகத்தில் காயங்களுடன் நடிகைகள்!

  • In Cinema
  • May 10, 2019
  • 316 Views
விஜய் படத்தில் முகத்தில் காயங்களுடன் நடிகைகள்!

சென்னை:

இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கால்பந்து விளையாட்டு குறித்த கதை கொண்ட இந்த படத்தில், பெண்களுக்கு கால் பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஈவிபி பிலிம் சிட்டியில் மைதானம் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் கடந்த 3 நாட்களுக்கு முன் வெளியானது. இதனைத்தொடர்ந்து, தற்போது, கால்பந்தாட்டத்தில் ஈடுபடும் நடி¬கைள் காயங்களுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதனால், ரசிகர்களிடையே மகிழ்ச்சியும், படக்குழுவினரிடையே அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்