‘தலைவி’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

  • In Cinema
  • November 23, 2019
  • 57 Views
‘தலைவி’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

சென்னை:

கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அவரது வாழ்க்கை குறித்த படத்தை எடுக்க பல்வேறு இயக்குனர்கள் தயாராகிவருகின்றனர்.

இயக்குனர் கவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை குறித்து வெப் சீரிஸாக எடுத்துக்கொண்டிருக்கிறார். இதேபோல், இயக்குநர் விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் படத்தின் பணிகள் பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டனர்.

இந்த படத்தில் வித்யாபாலன் நடிப்பதாக இருந்து, அவரின் கால்ஷீட் பிரச்சனையால் கங்கனா ரனாவத் நடிக்க ஒப்பந்தமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்