லட்சக்கணக்காணோர் பங்கேற்ற தேர் திருவிழா

லட்சக்கணக்காணோர் பங்கேற்ற தேர் திருவிழா

ஒசூர்:

ஒசூர் அருகே ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலை சீரமைத்து நடைப்பெற்ற தேர்த்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிப £டு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த குடிசெட்லு என்னும் கிராமத்தில் 1000 ஆண் டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேதா திம்மராயசாமி திருக்கோவில் இருந்து வருகிறது.

ஆண்டுதோறும் இந்தகோவிலில் தை மாதத்தில் நடைப்பெறும் தேர்திருவிழா பிரபலமாக உள்ளநிலையில், பழமையான இந்தகோவிலை கிராம மக்கள் சீரமைத்து கடந்தமாதம் ஜனவரி 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இந்தநிலையில் தொடர்ந்து தொடங்கிய திருவிழாவில் தினந்தோறும் சிறப்பு பூஜைகளுடன் பக்தர்கள் வழிப்பட்டுவந்தனர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைப்பெற்றது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ பூதேவி,பூதேவி சமேத திம்மராயசாமிகள் அமர்த்தப்பட்டு கோவிலை சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்கிற முழகத்துடன் வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்