நள்ளிரவில் மயான பூஜை

நள்ளிரவில் மயான பூஜை

ஒசூர்:

ஒசூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீமாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை நடைபெற்றது.

ஓசூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீமாசாணி அம்மன் கோயிலில் நள்ளிரவு மயானபூஜை நடைபெற்றது. இதில் மாசாணி அம்மன் சிலை முன்பு கோயில் பூசாரி அருள் வந்து எலும்பு துண்டுகளை கடித்து ஆடி பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். இந்த பூஜையில் ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஒசூர் சமத்துவபுரம் பகுதியில் பழமையான அருள்மிகு ஸ்ரீமாசாணி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி கொடியேற்றப்பட்டு பக்தர்களுக்கு காப்புகட்டி அலகு குத்துதல், பூகரகம், பால்குடங்கள் எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கோயிலில் நள்ளிரவு நேரத்தில் ஸ்ரீமாசாணி அம்மன் மயானபூஜை நடைபெற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்