கொடுமையான குற்றவாளிகள்: சஜ்னார் விளக்கம்

கொடுமையான குற்றவாளிகள்: சஜ்னார் விளக்கம்

ஹைதராபாத்:

தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் கூறுகையில், தெலங்கானாவில் பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 24 மணிநேரத்தில் 4 குற்றவாளிகளையும் கைது செய்தோம். அறிவியல் ரீதியாக தடயங்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 4 பேரையும் கைது செய்தோம்.

போலீஸ் காவலில் 4 நாள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. குற்றவாளிகள் எங்களிடம் பல உண்மைகளை தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் தான் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தோம். குற்றவாளிகளில் இருவர் காவல்துறையினரின் ஆயுதங்களை பறித்தனர். அவர்கள் மிக கொடுமையான குற்றவாளிகள் என்பதால், காவல்துறையினர் தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கி சூடு நடத்தினர் என அவர் தெரிவித்தார்.

இந்த என்கவுன்ட்டர் காலை 5.45 மணியிலிருந்து 6.15 மணிக்குள் நடந்தது. போலீசார் சுட்ட உடனேயே குற்றவாளிகள் இறந்து விட்டனர். முதல் குற்றவாளி முகமது, சப்-இன்ஸ்பெக்டரை தாக்க ஆரம்பித்தான். முகமதுவுக்கு 26 வயது, மற்றவர்களுக்கு 20 வயது எனவும், குற்றவாளிகள் தாக்கியதில் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. சரணடையும்படி எச்சரித்தோம், ஆனால் குற்றவாளிகள் கேட்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்