ஆடையாக உடல் உறுப்புகள்; பாடம் நடத்திய ஆசிரியை

  • In General
  • December 25, 2019
  • 186 Views
ஆடையாக உடல் உறுப்புகள்; பாடம் நடத்திய ஆசிரியை

ஸ்பெயின்:

மாணவர்களுக்கு புரிய வைக்கும் நோக்கில் உடல் உறுப்புகளை ஆடையாக அணிந்து பாடம் நடத்திய ஆசிரியையால் நம்மை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் 43 வயதான வெரோனிகா டியூக் என்றவர் 15 ஆண்டுகளாக பாடம் கற்பித்து வருகிறார். தற்போது அறிவியல், சமூக ஆய்வுகள், கலை, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் மூன்றாம் வகுப்புக்கு பயிற்றுவித்து வருகிறார்.

இதுகுறித்து வெரோனிகா டியூக் கூறுகையில், இளம் குழந்தைகளுக்கு உள் உறுப்புகளின் தன்மையைக் காண்பது எவ்வளவு கடினம் என்பதை அறிந்ததால், உடல் உறுப்புகள் வரைந்த உடையை அணிந்து முயற்சித்துப் பார்ப்பது மதிப்பு என்று நான் நினைத்தேன் என தெரிவித்தார்.

இதனை அவரது கணவர் உடலின் சில புகைப்படங்களை எடுத்து ட்விட்டரில் பகிர்ந்தார். டிசம்பர் 16ம் தேதி முதல் அவரது பதிவு 65,300க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 13,000 ரீட்வீட்களுடன் வைரலாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்