சீன பொருட்களுக்கு வரி உயர்வு; அமெரிக்கா அதிரடி!

சீன பொருட்களுக்கு வரி உயர்வு; அமெரிக்கா அதிரடி!

வாஷிங்டன்:

அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தபடி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை இன்று முதல் 10 முதல் 25 சதவீதம் உயர்த்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்து, வரியை குறைப்பதாக ஏற்கெனவே சீனா உறுதி அளித்திருந்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பில், சீனா உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாத காரணத்தால், அந்நாட்டிலிருந்து இறக்குமதியாகும், 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பு பொருட்களுக்கு, 10ம் தேதி முதல் வரி உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, சீன துணை அதிபர், லியு ஹீ தலைமையிலான குழு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்திசர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்துப் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த பேச்சுவார்த்தையில், சரியான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், ஏற்கனவே அறிவித்தபடி, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வு, நேற்று அமலுக்கு வந்தது.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் கிறிஸ்துமஸ் மின் விளக்குகள், குழந்தைகளுக்கான நாற்காலிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 700 பொருட்களின் வரியை 10 முதல் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்