தமிழகத்தில் என்.பி.ஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார்

தமிழகத்தில் என்.பி.ஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் உதயகுமார்

தமிழகத்தில் என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மாநில வருவாய்த்த துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) மற்றும் என்.சி ஆர் (தேசிய குடிமக்கள் பதிவேடு) உள்ளிட்டவைகளுக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் என்.பி.ஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மாநில வருவாய்த்த துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. என்பிஆர் கணக்கெடுப்பின் போது, குடிமக்கள் எந்த ஒரு ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை மேலும், என்பிஆர் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை மக்களிடம் பரப்புகின்றனர்.

இந்தப் புதிய சட்டத்தில் மூன்று கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசுத்த தரப்பில் இருந்து இதுவரை பதில் கிடைக்காததால் கணக்கெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்