மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவம் கனவை தொலைக்கின்றார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல் கட்சிகள் இதனை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். ஆனாலும் தமிழக அரசு. அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.கோச்சிங் சென்டர் தொடங்கி பல ஏற்பாடுகளை அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த தற்போது தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப் டாப்பில் நீட்தேர்வுக்கான பாடங்களை வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு வழங்கப்படும் இலவச லேப் டாப்பில் வீடியோ பாடங்கள், நீட் தொடர்பான பாடங்கள், குறிப்புகள் கேள்விகள் அடங்கிய பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.