தமிழக எம்பிக்கள் பதவியேற்பு!

தமிழக எம்பிக்கள் பதவியேற்பு!

புதுடெல்லி:

தமிழகத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்பிக்கள் இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பதவியேற்றுக்கொண்டனர்.

திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் இன்று டெல்லியில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பதயேற்றுக்கொண்டனர். இவர்கள் அனைவரும் தமிழிலேயே பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

மத்திய சென்னை தொகுதி எம்பியான தயாநிதி மாறன், தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என கூறி பதவியேற்றுக்கொண்டார்.

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பியான ஜெயக்குமார், காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராஜர் வாழ்க என்று குறிப்பிட்டு பதவியேற்றுக்கொண்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்