கொரோனா பாதிப்பில் 7-வது இடத்தில் தமிழகம்; அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான ஐ.ஏ.எஸ் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

கொரோனா பாதிப்பில் 7-வது இடத்தில் தமிழகம்; அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான ஐ.ஏ.எஸ் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

கொரோனா தடுப்பு குறித்து ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கடந்த மார்ச் 22ம் தேதி முதல் முறையாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அடுத்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் 21 நாள் முழு ஊரடங்கை அறிவித்தார். இது ஏப்ரல் 14க்குப் பிறகு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 40 நாள் ஊரடங்கு முடிவடைய ஒருவாரம் உள்ள நிலையில், பிரதமர் மோடி 4வது முறையாக மாநில முதல்வர்களுடான ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினார். இதில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கேரளாவின் பினராய் விஜயன், மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே, மேகாலயாவின் கோனர்ட் சங்மா, உத்தரகாண்டின் திரிவேந்திரம் சிங் ராவத், உபியின் யோகி ஆதித்யநாத் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் 3 மணி நேரம் இக்கூட்டம் நடந்தது. இதில் 4 மாநில முதல்வர் மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறிய மாநில முதல்வர்கள், அதேசமயம் பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கவும், மத்திய அரசு பொருளாதார நிதி உதவி வழங்கிடவும் கோரிக்கை விடுத்தனர். அந்தந்த மாநிலங்களுக்கும் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்றும், மாநில எல்லைகள் தொடர்ந்து சீல் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், பொருளாதார சவால்களையும், மருத்துவ கட்டமைப்புகளையும் மேம்படுத்துவதற்குமான பரிந்துரைகளை வழங்கினர்.

கூட்டத்தில், நாடு முழுவதும் மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை படிப்படியாக தளர்த்தலாம் என்றும், கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம் என்றும் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்