இந்து தீவிரவாதம் என பேசிய கமலுக்கு தமிழிசை கண்டனம்..!

இந்து தீவிரவாதம் என பேசிய கமலுக்கு தமிழிசை கண்டனம்..!

சென்னை:

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், தற்போது அரவக்குறிச்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பிரச்சாரத்தில் பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக பாஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம், இந்து தீவிரவாதம் என பிரச்சாரத்தில் கமல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்