தமிழச்சி மனு; அதிகாரிகள் சிரிப்பு

  • In Chennai
  • February 13, 2020
  • 239 Views
தமிழச்சி மனு; அதிகாரிகள் சிரிப்பு

சென்னை:

தென்சென்னை எம்பி., தமிழச்சி தங்கபாண்டியன் டெல்லியில் கொடுத்த மனுவை அறிந்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிரித்துள்ளனர்.

தென்சென்னையின் திமுக எம்பி.,யான தமிழச்சி தங்கபாண்டியன், நேற்று முன்தினம் டெல்லியில் நிதின்கட்கரியை சந்தித்து மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், சென்னை மாநகராட்சி எல்லைக்குள், இந்த ஐந்து சுங்கச்ச £வடிகளும் வருகின்றன. சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு, 30 நிமிடங்களுக்கு மேல், வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால், சாலையை எளிதாக கடக்கும் பயணியரின் நோக்கம் வீணடிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இந்த மனுவின் கோரிக்கை தமிழக அதிகாரிகளுக்கு வந்து சேர்ந்தது. இந்த மனுவில் குறிப்பிட்டிருந்த கோரிக்கை பார்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சிரித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ ச்சி கூறியுள்ள சுங்கச்சாவடிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றால் தமிழக அரசு அல்லது துறையின் அமைச்சரான முதல்வர்வரிடமும் தான் முறையிட வேண்டும்.

அதிகம் படித்த தமிழச்சி, எந்த சாலை, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றுகூட தெரியாமல், மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளது, வேடிக்கைய £க உள்ளது.இந்த கட்டண சாலைகள் அனைத்தும், தி.மு.க., ஆட்சியில் அமை க்கப்பட்டவை என்பதை, அவர் உணர வேண்டும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்