கேரள தண்ணீரை பெற தமிழக அரசு மறுப்பு!

கேரள தண்ணீரை பெற தமிழக அரசு மறுப்பு!

சென்னை:

தமிழகத்துக்கு ரயில் மூலம் 20 லட்சம் தண்ணீரை கொடுக்க முன்வந்தநிலையில், அதனை  தமிழக அரசு மறுத்துள்ளது.

தமிழக முதல்வர் அலுவலகத்தின் வேண்டுகோள் விடுத்தால், திருவனந்தபுரத்திலிருந்து 20 லட்சம் தண்ணீரை ரயில் மூலம் சென்னைக்கு அனுப்ப கேரள அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவவில்லை எனவும், தற்போதைய நிலையை தமிழக அரசே சமாளிக்கும் எனவும் கேரள அரசுக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்